குப்பைத் தொட்டியில் மனித எலும்புக்கூடு கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளை காலாத்தி அப்பா பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு துப்புரவு பணியாளர்கள் குப்பையை அள்ளி கொண்டிருந்தனர். அப்போது பிளாஸ்டிக் பை ஒன்றுக்குள் மனித எலும்புக்கூடு கிடந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் துப்புரவு பணியாளர்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று எலும்புக் கூடு பாகங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். […]
