மனிதர்களுக்கு புதிய ஆபத்து வரவிருப்பதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை., விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில், பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் விண்வெளிக் கழிவுகள் (செயல்படாத செயற்கைக்கோள், ராக்கெட் பாகங்கள்) மனிதர்கள் மீது விழுந்து உயிரிழப்பு, காயங்கள் ஏற்படுத்தும் ஆபத்து 10-ல் 1 பங்கு உள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், விண்வெளிக் கழிவுகளை அகற்ற உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
