ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே முழகுமூடு முப்பந்தாங்கள் பகுதியில் அமல ராஜேஷ் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. […]
