தேனி மாவட்டத்தில் கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள எண்டபுளி புதுப்பட்டி கிராமத்தில் ஜெயராஜ்(54) மற்றும் அவரது மனைவி ஜெயந்தியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ஜெயராஜ் கடந்த 10 ஆண்டுகளாக வயிற்றுப்புண்ணால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து ஜெயராஜ்க்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் இரு தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் […]
