நீலகிரி மாவட்டத்திலுள்ள தேனாடுகம்பை அருகேயுள்ள அணிக்கொரை பகுதியில் கிருஷ்ணகுமார் (43) என்பவர் வசித்து வந்தார். இவர் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஊட்டி நகர் பகுதியில் பல இடங்களில் யாசகமாக கிடைக்கும் உணவு மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார். அவர் நடந்து போகும்போது தனக்குதானே பேசிக்கொண்டே செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சேரிங்கிராஸ் பகுதியில் கிருஷ்ணகுமாரை ஒரு சிலர் தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். […]
