பாலஸ்தீனத்தின் காஸா நகரத்தின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 149 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் விமானத் தாக்குதலில் தன் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் பாலஸ்தீனியர் ஒருவர் கையில் “வெற்றி பெறுவோம்” என்ற குறியீட்டை காட்டியபடி கிடக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
