சென்னையில் 80 வயது தாயை கவனிக்க முடியாததால் தாயைக் கொன்று விட்டு மகனும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் சின்னமலை வெங்கடாபுரம் என்ற பகுதியில் 53 வயதுடைய ஆரோக்கிய ராஜ் என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழில் செய்து வரும் அவரின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதனால் ஆரோக்கியராஜ் திருமணம் செய்து கொள்ளாமல் 80 வயது மதிக்கத்தக்க தனது தாய் மேரி உடன் வசித்து […]
