சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் அனைத்து சமுதாய மக்களாலும் மத நல்லிணக்க திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் ஒன்றியத்தில் மதநல்லிணக்க ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழாவை அனைத்து சமுதாய மக்களும் வருடம்தோறும் இணைந்து நடத்துவது வழக்கம். இந்த வருடத்திற்கான திருவிழா ஷாபான் 1-ம் பிறையில் கொடியேற்றத்துடன் நடைபெற்றது. சந்தனக்கூடு ஷாபான் 10-ம் பிறையில் நகர் வலம் வந்து அதன் பின் ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்ஹாவிற்கு வந்தடைந்தது. […]
