ஆற்றங்கரையில் நடைபெற்ற மத சடங்கு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கில் ஜூஸ்கி என்னும் மிகப்பெரிய ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் கரையில் ஞானஸ்தானம் உள்ளிட்ட மத சடங்குகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சனிக்கிழமை ஜூஸ்கி ஆற்றங்கரையில் ஞானஸ்தானம் விழா நடைபெற்றதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் கரையில் நின்றிருந்த பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். […]
