Categories
தேசிய செய்திகள்

தடம் புரண்ட சரக்கு ரயில்…. திடீர் விபத்து….. பெரும் பரபரப்பு….!!!

அலகாபாத்திலிருந்து தீன்தயாள் உபாத்யாயாவிற்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 6:40 மணிக்கு சண்டவுலி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் மற்ற ரயில்கள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இந்த வழி தடத்தில் உள்ள ரயில்கள் திருப்பி விடப்படும் அல்லது வியாஸ் நகர் வழியாக தீன்தயாள் உபாத்யாயா சந்திப்புக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரானா எதிரொலி: மத்திய ரயில்வே நடைமேடை டிக்கெட் 5 மடங்கு உயர்வு.!!

மத்திய ரயில்வேயில் நடைமேடைகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பை, அகமதாபாத் மற்றும்  ராஜ்கோட் உட்பட 6 கோட்டங்களில் உள்ள 250 நடைமேடைகள் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரானா  எதிரொலியால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நடைமேடை கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்வு அமலில் இருக்கும் என மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |