மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கான தகுதிப்பட்டியல் குறித்த அறிவிப்பாணை வெளியானபோது, செம்மொழியான தமிழ்மொழி சேர்க்கப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து செம்மொழி வரிசையில் உள்ள தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தமிழ் மொழியையும் சேர்த்து மத்திய அரசு புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அந்த புதிய அறிவிப்பாணையில் மத்திய தொல்லியல் துறை பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் செம்மொழிகளான சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு,மலையாளம், ஒடியா, பாலி, பராகிரித், அரபிக், பாரசீகம் ஆகிய மொழிகளும் […]
