கொரோனா நோய்த்தொற்றை திறம்பட கட்டுப்படுத்த பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை, தடுப்பூசி போடுதல் மற்றும் கொரோனா தடுப்பு உள்ளிட்ட ஐந்து கட்ட பார்முலாவை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைகாலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல் […]
