மாறுபட்ட எக்ஸ்இ வகை கொரோனா நிலவரம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி பற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில், கடந்த ஜனவரி மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததையடுத்து, இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா 3-வது அலைக்கு ஒமைக்ரான் தொற்று முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் அனைத்து கொரோனா […]
