தமிழகம், புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கரையோரம் உள்ள கிராமங்கள் நீர்மூழ்கி, ஆயிரக்கணக்கான நிலங்கள் சேதமடைந்தது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததை ஆய்வு செய்ய மத்திய குழுவை புதுச்சேரிக்கு அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதன்படி மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் ஷர்மா தலைமையில் மத்திய வேளாண்துறை ஐ.டி. பிரிவு […]
