ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த 500 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தை மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 1,500 ஏக்கரில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அனல் மின் நிலையம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் சிக்கல் நீடித்து வந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க அரசு […]
