புதுச்சேரி மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் பகுதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் காரணத்தினால் நாளை முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவரக்ளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே நாளை முதலே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். […]
