Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ. 31,235 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது – மத்திய அரசு அறிவிப்பு!

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ. 31,235 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 8 கோடி விவசாயிகளுக்கு ரூ. 16,146 கோடி வரை நிதி உதவு அளிக்கப்பட்டுள்ளது. 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ. 10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. 2.82 கோடிக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,405 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10.6 லட்சம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ. 15,000,00,00,000 ஒதுக்கீடு…! ”கொரோனாவை ஒழிக்க” மத்திய அரசு நடவடிக்கை …!!

கொரோனவை தடுக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு 15,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா வேகமாக பரவி  வரும் இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ உட்கட்டமைப்ப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக  பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நாடு முழுவதும் 720 மருத்துவமனைகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா பிரச்சனை என்பது இத்துடன் முடிந்து விடாது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய, மாநில அரசுகளிடையே எந்த மோதலும் இல்லை – முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்!

கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 409ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கொரோனோவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 291 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 129லிருந்து 114 ஆகக் குறைந்துள்ளது […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஷாக் ஆன சீனா…!! ”இறங்கி அடித்த இந்தியா” முதலீடுகளுக்கு கிடுக்கிப்பிடி ….!!

அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியா விதித்த விதிமுறைகள் வர்த்தக அமைப்புக்கு எதிரானது என சீன வெளியுறவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஏராளமான நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையை பயன்படுத்தி சீனா இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை சொந்தம் கொண்டாடும் சூழல் உருவாகும் என எதிர்க்கட்சிகள் அரசை குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் வெளிநாடுகளை சேர்ந்த தனி நபர் அல்லது நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலை திட்டம்: ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.20 உயர்த்த மத்திய அரசு உத்தரவு!

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை ரூ.20 உயர்த்தி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.229 ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு ரூ.25 உயர்த்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது – மத்திய அரசு தகவல்!

ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது. கொரோனா பதிப்பில் இருந்து குணமடைத்து வருவோரின் விகிதம் 14.75%ஆக உள்ளதாகவும், கடந்த 14 நாட்களில் 59 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என தகவல் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் ஊரங்கில் சில தளர்வுகள் அமல் – அறிவிப்பில் இல்லாதவை என மத்திய அரசு கண்டனம்!

கேரள அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை குறைக்கவோ, நிறுத்தவோ மாட்டோம் – மத்திய அரசு உறுதி!

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல, ஓய்வூதியத்தை குறைக்கவோ, நிறுத்தவோ மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. கொரோனா வைரஸால் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து தொழில்களும் முடங்கப்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் ஊதியம் குறைக்கப்பட்டது, தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்டது. இதனிடையே மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றோரின் […]

Categories
தேசிய செய்திகள்

உணவுக்காக வரிசையில் நிற்கும் நிலை…. இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது – ப. சிதம்பரம் தாக்கு!

இலவச உணவுக்காக வரிசையில் நிற்கும் நிலையில், இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது என ப. சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 15,000ஐ கடந்துள்ளது. நாட்டில் 15,712 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 507 பேர் உயிரிழந்த நிலையில், 2,231 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் மக்கள் படும் துயரங்கள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி…. ஆனால் சில பொருட்களை மட்டுமே வாங்க முடியும்!

நாளை முதல் ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் மத்திய அரசு சில புதிய கட்டுபாடுகளை விதித்து அறிவித்துள்ளது. இந்தியாவில் 15,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தொழில்துறைக் கடுமையாக முடங்கியுள்ளது. இதில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் அடக்கம். இந்நிலையில் ஏப்ரல் 20 முதல் சில நிபந்தனைகளுடன் சில தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. அதாவது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சோலார் பேனல்கள் உற்பத்தி செய்ய தீவிரம் காட்டும் மத்திய அரசு: ஓகே சொன்ன தூத்துக்குடி துறைமுகம்..!

சோலார் பேனல் உற்பத்தி பூங்காக்கள் அமைக்க தூத்துக்குடி துறைமுகம் விருப்பம் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி சாதனங்கள் உற்பத்திக்கு நிலம் கண்டறியக் கோரி மத்திய அரசு கோரிக்கை வைத்தது. மத்திய அரசின் சுற்றறிக்கையை ஏற்று தூத்துக்குடி துறைமுகம் விருப்பம் தெரிவித்துள்ளது. சோலார் பேனல்கள் உற்பத்தியில் உலக அளவில் சீனாவே முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் மின்னுற்பத்திக்கு 50% உபகரணங்கள் செனவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உலக நாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

பாரசிட்டமால் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான ஏற்றுமதி தடை நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

பாரசிட்டமால் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான ஏற்றுமதி தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு மருந்துகளுக்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பல மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அதில் 12 வகை மருந்துகள் ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லை என்றால் தட்டுப்பாடு ஏற்படும் என மருத்துவ குழு கூறியிருந்தது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளாக குளோரோம் பெனிக்கல், மெட்ரோனிடேஷில், சிலிடோ அமிசின் மற்றும் விட்டமின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூம் செயலியை காணொலி காட்சி சந்திப்பிற்கு பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

ஜூம் செயலியை காணொலி காட்சி சந்திப்பிற்கு பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுதுவம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோம், மற்றும் முக்கிய ஆலோசனைகளுக்கு வீடியோ கால் இன்றியமையாததாக உள்ளது. வீடியோ கால் செய்ய பலரும் ஜூம் (Zoom) என்ற சாஃப்ட்வேரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இது பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். வீடியோ மீட்டிங்குகள், ஆடியோ கால்கள், பிரைவேட் சாட்கள் என அனைத்து விஷயங்களையும் இந்த ஒரே செயலியில்பெறலாம். இதற்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இது போதாது, இன்னும் பண்ணுங்க – கொரோனா வேகமாக பரவும் – ராகுல் வலியுறுத்தல் ..!!

கொரோனா பரவலை தடுக்க அதிக அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . முன்னதாக 21 நாட்கள் விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து இன்று காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சித் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 11,933ஆக உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,933ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கின் போது மத்திய அரசின் வழிமுறைகளை எந்த சமரசமின்றி செயல்படுத்த வேண்டும் – உள்துறைச் செயலாளர் கடிதம்!

ஊரடங்கின் போது மத்திய அரசின் வழிமுறைகளை எந்த சமரசமின்றி செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற நெறிமுறைகள் நெறிமுறைகளை மத்திய அரசு இன்று காலை வெளியிட்டது. அதில் ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நெறிமுறைகள் : ஏப்., 20ம் தேதிக்கு பின்னர் எவையெலெல்லாம் இயங்கும், எதற்கெல்லாம் தடை – முழு விவரம்!

மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் சிலவற்றிற்கு அனுமதி அளித்துள்ளது. எந்த தொழில்களுக்கெல்லாம் அனுமதி, எதெற்கெல்லாம் தடை தொடரும் என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கு காண்போம்., ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. எதெற்கெல்லாம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 20ம் தேதி முதல் எந்த தொழிலுக்கு எல்லாம் மத்திய அரசு அனுமதி!

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா பாதிப்பின் காரணமாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ள நிலையில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவின் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீட்டுள்ளது. அதில், ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல  100 நாள் வேலை […]

Categories
தேசிய செய்திகள்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் – மத்திய அரசு உத்தரவு

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிகையாக  மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற நெறிமுறைகள் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க முடியாது: உச்சநீதிமன்றம்

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை நாட்டிலுள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக தீவு காண கோரி வழக்கறிஞர் அமித் சஹானி உள்ளிமருத்துவம் ட்ட 3 பேர் தனித்தனியாக ஒரு பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா ”சமூக பரவல் ஏற்படவில்லை” மத்திய அரசு விளக்கம் ….!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை  விரிவு படுத்தி வருகிறது. கடந்த 2 வரமாக இந்தியாவிலும் கொரோனாவில் வீரியம் மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். ஆனாலும் மத்திய மாநில அரசு கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை தூரிதப்படுத்தி வருகின்றது. ஏப்ரல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஊரடங்கை நீட்டிக்க மாநிலங்கள் கோரிக்கை – பிரதமர் மோடி

ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று அனைத்து மாநில அரசும் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாட்டில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அனைத்துக்கட்சி கூட்டம் என்ற வகையில் அமைந்த இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசிய விஷயங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது அதில், ஒவ்வொரு உயிரையும் காப்பது தான் அரசாங்கத்தின் மிக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய தவறினால் கட்டாயப்படுத்தலாம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளியே வருபவர்களின் ஓட்டுநர் உரிமங்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை செய்ய தவறினால் கட்டாயப்படுத்தலாம் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் அதிகம் பாதித்த தமிழகத்திற்கு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கொரோனா நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.510 கோடி ஒதுக்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.966 கோடி, மத்தியபிரதேசத்துக்கு ரூ. 910 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படாது: மத்திய அரசு

கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் அரசு, தனியார் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்களுக்கான செலவினங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது. மேலும், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்., 9ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?… மாநில அரசுகளின் கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை!

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீடிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநில அரசுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல வல்லுநர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சகத்தை செயலாளர் கூறியதாவது, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற தகவல் தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஊரடங்கை நீடிப்பதற்கு வாய்ப்பில்லை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டம் ? பரபரப்பு தகவல்கள் …!!

நாடு முழுவதும் ஏப்ரல் 14 பிறகு ஊரடங்கு நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது நாடு முழுவதும் ஏப்ரல்14 பிறகு உடனே நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது ஏப்ரல் 14 பிறகு ஊரடங்கு நீட்டிக்கலாமா ?  அல்லது முடித்துக் கொள்ளலாமா ? என்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக ஊரடங்கு முடித்துக் கொண்டால் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தேசிய சுகாதார நிதியிலிருந்து மேலும் ரூ.3000 கோடி ஒதுக்கீடு.. மத்திய அரசு

மாநிலங்களுக்கான தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, மேலும் ரூ .3000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இந்தியாவில், கடந்த 24 ,மணி நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாவும், இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆகக் உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதில் ஜப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 1445 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் போதிய அளவு உணவு, தானியங்கள் கையிருப்பில் உள்ளன- மத்திய அரசு தகவல்!

வீடுகளில் தயாரித்த முகக் கவசங்களை மக்கள் பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் போதிய அளவு உணவு, தானியங்கள் கையிருப்பில் உள்ளன என்றும் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு மேலும் ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4067 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு முடிவுக்கு அப்புறம் என்ன பண்ண போறீங்க – கேள்விகளை அடுக்கிய திருமாவளவன்

ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் எடுக்கப்போகும் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி கேட்டுள்ளார்  உலகையே அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அந்த உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதற்குப் பிறகு மத்திய அரசு என்ன செய்யும், என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு ரூ.500 கோடி வழங்கி உள்ளது – முதல்வர் பழனிசாமி தகவல்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வாணலி மூலம் இன்று காலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாவட்ட முதல்வர்களும் பங்கேற்ற நிலையில், இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, கொரோனோவை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது என கூறியுள்ளார். தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் 1,848 பேர் சிகிச்சை பெறுகின்றனர் தமிழகத்தில் 17 கொரோனா பரிசோதனை மையம் உள்ளது மேலும் 21 […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில் வேலையை பறிக்கும் IT நிறுவனங்கள்..!!

கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பல பெரிய ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில ID நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து வருவதாகவும் கூறப்படும் நிலையில், இதற்கு எதிராக ஐடி ஊழியர் சங்கங்கள் களத்தில் குதித்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் இதுபோன்ற தொழிலாளர் விரோதப் போக்கில் செயல்படக்கூடாது என்று மத்திய அரசு எச்சரிக்கையை பல  ஐடி நிறுவனங்கள் அலட்சியப்படுத்துவதாக செய்திகள் கசிந்துள்ளது. சட்ட விரோத நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களுக்கு உதவும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவு – நாடு முழுவதும் 75 லட்சம் பேருக்கு இலவச உணவு…மத்திய அரசு

ஊரடங்கு உத்தரவை ஓட்டி நாடு முழுவதும் 19 ஆயிரத்து 460 சிறப்பு முகாம்களில் 75 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு உணவு, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…. 472 பேர் பாதிப்பு, 11 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை

கடந்த 24 மணி நேரத்தில் 472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அஃகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த எண்ணிக்கை 3,374ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பு 79ஆக உயர்ந்துள்ளது. 267 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேரும், தமிழகத்தில் 485 பேரும், டெல்லியில் 445 பேருக்கும், கேரளாவில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள் ஆலோசனை!

தமிழக அரசு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடூர கொரோனா வைரஸால் இந்தியாவில் 77 பேர். பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,374ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸால் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 485 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. விளக்கேற்றும் முன் இதை பயன்படுத்தாதீங்க… இந்திய ராணுவம் அறிவுறுத்தல்!

நாளை இரவு விளக்கு ஏற்றுவதற்கு முன்பு சனிடைசரால் கைகளை கழுவ வேண்டாம் என்று  இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது பிரதமர் மோடி நேற்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் வீடியோ காணொளியில் உரையாற்றும் போது, ஏப்ரல் 5 ஆம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு அனைவரும் 9 நிமிடம் விளக்கை அணைத்து விட்டு டார்ச், செல்போன் லைட் அடிக்க வேண்டும் அல்லது அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி ஒற்றுமையை  வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாளை மருத்துவமனை, தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம் – மத்திய மின் அமைச்சகம் அறிவுறுத்தல்!

நாளை இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் என மத்திய மின் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனை, வீட்டு உபயோக பொருட்களுக்காக ஸ்விட்சை அணைக்க வேண்டாம். குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, டிவி போன்ற சாதனங்களை அணைக்க தேவையில்லை. தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம், ஒவ்வொரு தெருவிலும் விளக்கு எரிவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைத்து எரிய […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வீடுகளைவிட்டு வெளியேறும் போது அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

வீடுகளைவிட்டு வெளியேறும் போது அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வீடுகளிலேயே தயாரிக்கப்பட்ட முககவசங்களை அணிய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா சமூக பரவலாக மாறுவதை தடுக்க முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 68 பேர் உயிரிந்துள்ள நிலையில் 2,900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் உச்சநீதிமந்திற்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பேரழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் உதவியோடு தேசிய மற்றும் மாநில ஆலோசனைக் குழுவை […]

Categories
தேசிய செய்திகள்

புலம் பெயர்ந்தவர்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களின் எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கூட்டம் கூட்டமாக நகர்ந்து வருகிறார்கள். புலம்பெயரும் […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் ஜூன் 30 வரை செல்லும் – மத்திய அரசு!

பிப்ரவரி 1ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் மோட்டார் வாகன ஆவணங்கள் புதுப்பிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் ஆவணங்களை செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரசால 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா – இந்தியாவில் சமூக பரவலாக மாறவில்லை… மத்திய அரசு விளக்கம்..!!

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 227 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்காரணமாக  இந்தியாவில் கொரோனா பரவல்  3-வது நிலையான சமூக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்கள்… தமிழக அரசு உடனடியாக மீட்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்..!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலுள்ள பிற வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்ற, மற்றும் சரக்கு ஏற்றி சென்ற […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேறு மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

வேறு மாநிலங்களில் பணியாற்றும் தொழிலார்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தினக் கூலிகளாக, கட்டிட தொழிலார்களாக பணியில் உள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்தது. இதையடுத்து மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 80 கோடி பேருக்கு சலுகை – மத்திய அரசு!

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில், ரேஷன் கடைகளில், பயனாளிகளுக்கு அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கண்டறியும் கருவி தயாரிக்க 2 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி! 

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகளை தயாரிக்க 2 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் அல்டோனா டயக்னஸ்டிக்ஸ், மைலேப் ஆகிய 2 நிறுவனங்கள் கொரோனா பரிசோதனை கருவிகளை தயாரித்து வழங்க உரிமம் பெற்றுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவரையும் பரிசோதனை செய்வது சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. முன்னதாக நேற்று புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் தடை …. 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் – மத்திய அரசு அறிவுறுத்தல் ..!!

அத்தியாவசிய பொருட்களில் தேவை பிரச்சைகளுக்கு கட்டுப்பாட்டு மையம் அமைக்க மத்திய அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்  ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 144 , ஊரடங்கு உத்தரவு வெளியானதை அடுத்து மக்கள் பீதியடைந்து அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்காதோ […]

Categories

Tech |