Categories
Uncategorized

இது அரசுக்கு… ‘வெட்கக்கேடான செயல்’… கொந்தளித்த ராகுல்காந்தி… பிரியங்கா காந்தி ஆவேசம்…!!!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு செவி சாய்க்காமல் அவர்கள் மீதே அரசு பழி சுமத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கான இழப்பீட்டை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை. கொரோனா காலகட்டத்தில் நிதி இல்லாத காரணத்தால் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுமாறு மாநிலங்களுக்கு இரண்டு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்ட வழக்கு… 4 வாரம் தான்… அதற்குள் பதில் சொல்லனும்… மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு தகுந்த விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகியவை ஏற்றப்பட்டன. அந்த மசோதாக்கள் அனைத்திற்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். அதன் பிறகு அது வேளாண் சட்டம் ஆக மாறியது.அந்த வேளாண் […]

Categories
மாநில செய்திகள்

மாநில உரிமைக்காக சிறை செல்ல தயார் – புதுச்சேரி முதலமைச்சர்

மாநிலங்களுக்கான உரிமையை மத்திய அரசு படிப்படியாக குறைத்து வருவதாகவும் சிபிஐ அமைப்பை பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் மிரட்டபடுவதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாநில உரிமைகளுக்காக சிறை செல்ல தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

கைவிரல் ரேகை பெறாவிட்டாலும் ரேஷன் பொருட்கள் வழங்கலாம் …!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் கைவிரல் ரேகையில் அங்கீகாரம் பெறாவிட்டால் மற்ற முறைகளை கையாண்டு பொருட்களை வழங்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மட்டுமின்றி பிற ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வழங்க கைவிரல் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகம் வர அரசு அதிரடி உத்தரவு …!!

மத்திய அமைச்சக செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவலகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி, காலை 10 முதல் 6.30 மணி வரை என இரு பிரிவாக அதிகாரிகள் பணியாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

 பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது?… கண்டிப்பா பாலோவ் பண்ணனும்… மத்திய அரசு… வெளியிட்டுள்ள அறிவிப்பு…!!!

அடுத்த மூன்று மாதங்களில் வரவிருக்கும் பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது என்று மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊரடங்கு தொடர்புகளை 5 கட்டங்களாக அறிவித்து நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. இந்த மாதம் துர்கா பூஜை, தசரா மற்றும் விஜயதசமி, […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலை வேண்டாம்… இந்திய தொழிற்சாலைகளுக்கு… மகிழ்ச்சி செய்தி… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியா தயாரிக்கும் அனைத்து விதமான கவசங்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு முககவசம் மற்றும் கவச உடைகளின் தேவை அதிக அளவு இருந்ததால், என்-95உள்ளிட்ட முகக்கவசம் மற்றும் கவச உடைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் உள்நாட்டு சந்தையில் அதிக அளவிற்கு வரத்து இருக்கும் காரணத்தால் தற்போது அனைத்து விதமான முகக் கவசங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விழுப்புணர்வு குறித்து மத்திய அரசு ஆலோசனை …!!

பொதுமக்களிடையே கொரோனா மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான புதிய பிரச்சார நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. கொரோனா ஊரடங்கில் ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் பண்டிகை காலங்களில் முன்னிட்டு மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதிய பிரச்சார வழிமுறைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

திரையரங்குகளை திறக்கலாம்… ஆனால் இதனை… கட்டாயம் செய்ய வேண்டும்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

திரையரங்குகளை வருகின்ற 15ஆம் தேதி முதல் பிறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வருகின்ற 15ஆம் தேதி குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வகையில் திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை, […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில் வட்டிக்கு வட்டி … விளக்கமளிக்க மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் கெடு …!!!

கொரோனா ஊரடங்கு  காலத்தில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில்  பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசிறகு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது . கொரோனா காலத்தில் குறிப்பாக மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஆறு மாத கால இடைவெளியில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம் தொடர்பான  வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனிடையே இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் பொது […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் புதிர்ப்போட்டி… புறக்கணிக்கப்படும் தமிழ் மொழி… கனிமொழி ஆவேசம்…!!!

தமிழகத்தில் மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கும் புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருவதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் ஒரு புதிர் போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறது. அதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாமல் தாய்மொழி மட்டுமே தெரிந்த குழந்தைகள் அதிக அளவில் இருப்பதால், இப்போட்டி அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டும்”என்று அவர் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு… அடுத்த ஆறு மாதங்களில்… வாங்கப்போகும் கடன்… எவ்வளவு தெரியுமா?…!!!

மத்திய அரசு வருகின்ற ஆறு மாதங்களில் 4 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் 12 லட்சம் கோடி கடன் வாங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.அவ்வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நிதியாண்டில் முதல் பாகத்தில் 7 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொடர்பான செலவுகளுக்காக மீதமுள்ள ஆறுமாதங்களுக்கு 4 லட்சத்து 34 […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை உட்பட மூன்று நகரங்கள்… என்.ஐ.ஏ அமைப்பின் கிளை… மத்திய அரசு ஒப்புதல்…!!!

சென்னை உட்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ அமைப்பின் கிளை அமைப்பதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ அமைப்பின் கிளை அமைப்பதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வகையில் சென்னை, இம்பால் மற்றும் காஞ்சி போன்ற இடங்களில் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளில் இந்த அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடைய வழக்குகளிலும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்யும்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் வேண்டாம்…. இரு மொழி தான்… GST தொகை கொடுங்க…. மத்திய அரசை கேட்டு அதகளம் செய்த அதிமுக …!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக கொரோனா நோய் தொற்று காலத்திலும்,  தொடர்ச்சியாக பல்வேறு பணிகளை மேற்கொண்ட தமிழக அரசும்,  தமிழக முதலமைச்சரும், தமிழக துணை முதலமைச்சரும்,  அமைச்சர்களும் தொடர்ச்சியாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாட்டிற்கு முன்னோடியாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக நோய் தொற்று, நோய் தடுப்பு பணிகளையும், […]

Categories
தேசிய செய்திகள்

வாரத்தில் ஒருநாள் மட்டும்…. குடும்பத்தோடு உக்காருங்க…. கதை சொல்லி மகிழுங்க… மோடி வேண்டுகோள் …!!

தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலை பற்றி மன்கிபாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலமாக ”மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் பல்வேறு மக்கள் செய்துவருபவர்கள், சேவை பணிகள், தொண்டுகள் செய்து வருவதை சுட்டிக்காட்டியும், அவர்களை பாராட்டியும் பல்வேறு ஆலோசனைகளை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்றும் நடைபெற்ற மங்கிபத் எனும்  […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்..!!

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றிய மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா அரசால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதற்குத் துணைபோன தமிழக அரசை கண்டித்தும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், விவசாயிகளும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை சின்னப்பா […]

Categories
தேசிய செய்திகள்

மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு செப்-28ம் ஆம் நாள் பிரச்சாரம் தொடக்கம்…!!

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 28ஆம் நாள் முதல் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் தொடங்கப் போவதாக தேசிய மீனவர் பேரவை அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத் திருத்த சட்ட முன்வரைவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய மீனவர் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் சங்கத்தினர் புதிய வேளாண் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது – எதிர்க்கட்சிகள்..!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே புதிய வேளான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண்  சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதா: ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம்..!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் விளை பொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள்  மசோதா ஆகிய மசோதாக்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலும் இந்த சட்டங்கள் இருப்பதாக விவசாயிகள், அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. மத்திய அரசின் இந்த சட்டங்களை கண்டித்து அரியானா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நெருக்கடியில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு தவறிவிட்டது..!!

கொரோனா நெருக்கடியில் இருந்து மத்திய அரசு மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மத்திய அரசின் தவறான பொருளாதார அணுகுமுறையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக திருமாவளவன், மோடி அரசு கொரோனா  நெருக்கடியில் இருந்து மக்களை காப்பதற்கு தவறிவிட்டது. பொருளாதார ரீதியாக மிகப்பெரிய […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் நீட் தேர்வு பற்றி மு. க. ஸ்டாலின் பேச்சு

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், அரியலூர் அனிதா முதல் திருச்செங்கோடு மோதிலால் வரை பல மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துக்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கக்கோரி இரு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க நிதியில்லை மத்திய அரசு கைவிரிப்பு..!!

நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க போதிய நிதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபரில் திரையரங்குகள் திறக்கப்படுமா…?… மத்திய அரசு பதில்…!!

நாடு முழுவதும் திரையரங்குகள் திறப்பது குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை பொது முடக்கம் அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. ஆனால் இந்த நான்காம் கட்ட ஊரடங்களில் அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அந்த வகையில் பொதுப் போக்குவரத்து என்பது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் திரையரங்குகள் எப்பொழுது செயல்படும் என்ற கேள்வி மக்கள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

‘எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு…. ”ரூ.31,000 சம்பளம்” சூப்பரான மத்திய அரசு வேலை …!!

மத்திய அரசிற்கு உட்பட்ட கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த செய்தி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். நிர்வாகம் : கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு பணி : Junior Research Fellow கல்வித் தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Microbiology, M.Sc Agriculture, M.Tech Biotechnology, M.Sc […]

Categories
தேசிய செய்திகள்

“உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் விவரம் எங்களிடம் இல்லை”… மத்திய அரசு பதில்…!!

நாடு முழுவதும் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து மக்களவை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கப்பட ஊரடங்கு காரணமாக பல்வேறு மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். அவர்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைய பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைப் பற்றி மக்களவை கூட்டத்தில் பேசிய போது, சென்ற மார்ச் 25ஆம் தேதி முதல் போடப்பட்ட 68 நாள் ஊரடங்கின் போது, சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வழியில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் […]

Categories
தேசிய செய்திகள்

“21 ஆம் தேதி” பள்ளிகள் திறப்பு… ஆனா இதெல்லாம் செய்யணும்… மத்திய அரசின் அதிரடி தகவல்…!!

வருகின்ற 21அம் தேதி பள்ளிகளை திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்பொழுது நான்காம் கட்ட ஊரடங்களில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து இருப்பதால் வருகின்ற 21 ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. பள்ளிகள் திறந்ததும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் […]

Categories
மாநில செய்திகள்

13 மாவட்டம்… ரூ.110,00,00,000 மோசடி… சிக்கிய அரசு ஊழியர்கள்… 80பேர் நீக்கம் …!!

மத்திய அரசு விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் நிறைய திட்டங்களை வைத்துள்ளார்கள். அதில் புதிய செய்தி என்னவென்றால் பிரதம மந்திரியின் உழவர் நிதி திட்டத்தில் தமிழகத்தில் நடந்த ஊழல் முறைகேடு…. இது என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இதில் நடந்த முறைகேட்டால் சுமார் 110 கோடி ரூபாய் சுருட்டபட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றார்கள். இதில் விவசாயி அல்லாத சுமார் 5.5 லட்சம் பேர் விவசாயி என்ற போர்வையில் பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது. இந்த கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

சத்குரு கருத்து மிகவும் அவசியமானது – மத்திய அமைச்சர் பாராட்டு …!!

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகருடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார். இந்தியாவில் உள்ள முக்கிய நதிகளை புத்துயிரூட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்கள் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகருடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார். இந்த ஆன்லைன் கலந்துரையாடல் சத்குருவின் 63-வது பிறந்த தினமான 3ஆம் தேதி  நடந்தது. கடந்தாண்டு இதே செப்.3-ம் தேதி தான் காவேரி கூக்குரல் இயக்கமும், 2017-ம் ஆண்டு செப்.3-ம் தேதி  நதிகளை மீட்போம் […]

Categories
தேசிய செய்திகள்

திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு…!!

திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து வரும் எட்டாம் தேதி ஆலோசனை நடத்தவிருந்த மத்திய அரசு, தென்னிந்தியத் திரைப்பட உரிமையாளர்களைப் புறக்கணித்து. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கொரோனா தடை உத்தரவு காரணமாக வழிபாட்டு தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்து இடங்களும் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் திரையரங்குகள் திறக்கப்படாமலுள்ள நிலையில் அது குறித்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக ஐந்து மொழிகளுக்கு ஒப்புதல்…!!

ஜம்மு – காஷ்மிரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோகிரி, காஷ்மீரி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

“பப்ஜி தடை”… டாக்டர் ராமதாஸ் வரவேற்பு…!!

118 செயலிகளை மத்திய அரசு தடை செய்ததற்காக டாக்டர் ராமதாஸ் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நலன் கருதி மத்திய அரசு 118 செயலிகளை தடை விதித்துள்ளது. முக்கியமாக இந்த பப்ஜி என்ற கேம் செயலி மூலம் மாணவர்கள் சமூக சீர்கேட்டுக்கு ஆளாகி வருகின்ற காரணத்தால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்முறையை குறித்து பல்வேறு தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பட்டதாரிகளே…. ”ரயில்வேயில் வேலை”…. 35,208 காலி பணியிடங்கள்….!!

7ஆவது ஊதியக்குழுவின் சம்பளத்தின் அடிப்படையில் இந்திய ரயில்வேயில் 35,208 காலி பணியிடங்கள் இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்வே தேர்வு வாரியம் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் உள்ள 35,208 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆன்லைனில் தேர்வு நடத்த உள்ளது. அதில் 24,605 பணியிடங்கள் பட்டதாரிகளுக்காகவும், 10,603 பணியிடங்கள் இளங்கலை படித்தவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வுகள் இந்திய ரயில்வே தேர்வு செய்யும் ஏஜென்ஸிகள் மூலம் நடத்தப்படும். அந்த ஏஜென்ஸிகள் அனைத்தும் டென்டர் மூலம் தேர்வு செய்யப்படும். தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

நிலுவைத் தொகை செலுத்த 10 ஆண்டுகள் அவகாசம்…!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு உரிமக் கட்டணம் அலைக்கற்றை கட்டணமாக சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் வட்டியுடன் பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இந்த தொகையை செலுத்துமாறு உச்ச […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி மறைவு – 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு…!!

பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியரசு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி காலமான நிலையில், நாடு முழுவதும் இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கொடிகள் அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து இந்திய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் ….!!

ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க கோரி முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 12 ஆயிரத்து 250 கோடி ரூபாயை விரைவில் விடுவிக்குமாறு அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 41வது ஜிஎஸ்டி காணொளி மூலமாக நடைபெற்றது.  தமிழக அரசு சார்பில் அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு வெளியிட்ட… “4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு”… தமிழகம் பின்பற்றுமா…??

மத்திய அரசு வெளியிட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மாநில அரசுகள் பின்பற்றுமா என கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நேரத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு பற்றிய சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்குத் தளர்வுகளை தமிழக அரசு முழுமையாகப் பின்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றிரவு, தொடங்க உள்ள நாலாம் கட்ட ஊரடங்கு வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் – பிரதமர் மோடி பேச்சு ….!!

புதிய கல்விக்கொள்கை நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற  பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்தவகையில் இன்று (ஆக. 30) 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தி வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஒரே பட்டியல் – மத்திய அரசு புதிய திட்டம் ….!!

நாடு முழுவதும் ஒரே விதமான வாக்காளர் பட்டியலை தயாரிக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததை அடுத்து…. அவ்வப்போது புதுப்புது திட்டங்களையும், சட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் புதிய திட்டம் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் அனைத்து விதமான தேர்தல்களிலும் பயன்படும் வகையில் ஒரே விதமான வாக்காளர் பட்டியலை உருவாக்க […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு ஷாக்…. எல்லாமே முடிஞ்சது…. இனி தயாரா இருங்க …!!

வங்கிகளில் கடனுக்கான நிலுவை தொகையினை வசூலிக்க கால அவகாசம் நீடிக்க வாய்ப்பில்லை என தெரிகின்றது. நாட்டில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதார நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வேலைவாய்ப்பு இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளை வெளியிட்டு வந்தன.அந்த வகையில் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை வசூலிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மேலும் நீடிக்க வாய்ப்பில்லை – அதிர்ச்சி தகவல்

வங்கிகளில் கடனுக்கான நிலுவை தொகையினை வசூலிக்க கால அவகாசம் நீடிக்க வாய்ப்பில்லை என தெரிகின்றது. நாட்டில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதார நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வேலைவாய்ப்பு இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளை வெளியிட்டு வந்தன.அந்த வகையில் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை வசூலிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

100 பேர் இருங்க…. படம் பாருங்க…. அரசு கொடுத்த அனுமதி …!!

நாடு முழுவதும் திறந்தவெளி திரையரங்கள், 100பேருடன் கூட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் நாளையோடு  3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அன்லாக் 4.o : 50% ஆசிரியர்களை பள்ளிக்கு அழைக்கலாம்… முக்கிய அறிவிப்பு..!!

செப்டம்பர் 21 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவீத ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் குறித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திரையரங்குகளை திறக்க அனுமதி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் திறந்தவெளி திரையரங்கம் திறக்க மத்திய அரசு அனுமதியை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் நாளை மறுநாளோடு 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்கம், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் – மத்திய அரசு..!!

4ஆம் கட்ட பொது முடக்க தளர்வுகளில் செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு …!!

நாடு முழுவதும் மெட்ரோ சேவையை தொடர மத்திய அரசு அனுமதி அளித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாட்டில் ஊரடங்கு நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ சேவையை தொடரலாம் என்று அறிவிப்பு வழங்கபட்டுள்ளது. நாடு முழுவதும் அரசியல் ரீதியான, கலாசார ரீதியான, சமூக ரீதியான கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் 100 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. 21 செப்டம்பர் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அன்லாக் 4.0…. என்னென்ன தளர்வுகள் உண்டு ? வெளியான தகவல் …!!

நாடு முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த விவரங்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மூன்று கட்ட மூன்றாம் கட்ட தளர்வு அமலில் இருந்து வருகிறது. நாளை மறுநாள் ( 31ஆம் தேதியோடு ) இந்த தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய – மாநில அரசுகள் நான்காம் கட்ட தளர்வுகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. அந்த […]

Categories
மாநில செய்திகள்

பொது ஊரடங்கு – தமிழக அரசு முக்கிய ஆலோசனை…!!

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அது குறித்து முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு பொது ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இம்மாதம் 31ஆம் தேதியுடன் பொது ஊரடங்கு காலம் நிறைவடையவுள்ள நிலையில் அதுகுறித்து முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
மாநில செய்திகள்

வங்கி கடன் வழக்கு… உச்ச நீதிமன்றம் கண்டனம்… திணறும் மத்திய அரசு…!!!

மத்திய அரசின் வங்கிக்கடன் வழக்கில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கி கடன்களை திரும்ப செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசிற்கு எதிராக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் கூறும்போது, ” மத்திய அரசு வங்கி கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளது. நீங்கள் அறிவித்த பொது முடக்க உத்தரவு காரணமாகவே இந்தப் பிரச்சனை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு மறைக்க முடியாது – ராகுல்

நாட்டில் நிலவும் வேலையின்மை பொருளாதார சீரழிவுக்கு மத்திய அரசே காரணம் என திரு ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வேலையின்மை, பொருளாதார சீரழிவு உண்மைகள் இந்திய மக்களிடம் இருந்து மத்திய அரசு மறக்க முடியாது என குற்றம்சாட்டி உள்ளார். பேஸ்புக்கில் தவறான செய்திகள் மற்றும் வெறுப்பைத் பரப்புவதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். நான்கு மாதங்களில் இரண்டு கோடி பேர் வேலைவாய்ப்பு, 2 கோடி குடும்பங்கள் எதிர்காலம் இருளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நதிகள் இணைப்பு – முதல்வர் ஆலோசனை …..!!

நதிகள் இணைப்பு தொடர்பாக தற்போது தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. நதிகள் இணைப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜேந்திர சிங் ஷெகாவத்துடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். காவிரி ஆறு, கோதாவரி ஆறு இணைப்பு தொடர்பாக காணொலிக் காட்சி மூலமாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகின்றது. குண்டாறு இணைப்புத் திட்டம், கருமேனி நதிநீர் இணைப்பு திட்டம் மற்றும் காவிரி ஆற்றை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இவை தவிர தமிழகத்தின் […]

Categories

Tech |