ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பணத்தை திருடிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள எம்பிகே நகர் பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாக்குலின் என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த 5 மாதங்களாக அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜாக்குலினுக்கு கம்பெனியில் புதிதாக வங்கி கணக்கு துவங்கி கொடுத்து ஏடிஎம் கார்டு கொடுத்துள்ளனர். இதனையடுத்து ஜாக்குலின் ஏடிஎம் கார்டை ஆக்டிவேட் செய்வதற்காக ஏடிஎம் சென்டருக்கு சென்றுள்ளார். […]
