Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல்… 71 முன்பதிவற்ற ரயில்கள் இயக்கம்… மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் நாளை முதல் 71 முன்பதிவற்ற ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்… ரூ.814 கோடி இழப்பு… அதிர்ச்சி செய்தி…!!!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு 814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 119 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. 12வது தேர்ச்சி பெற்றால் போதும்… பி.ஆர்க் படிப்பில் சேரலாம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பி.ஆர்க் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே போதும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

“பொள்ளாச்சி – பழனி வரை பக்தர்களுக்கு தனிநடைபாதை”… மத்திய அமைச்சர் தகவல்…!!

பொள்ளாச்சி கமலாபுரத்திலிருந்து பழனி வரை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நடை பாதை அமைக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பழனியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அலுவலகம் திறக்கப்பட்டது. இதை சாலை போக்குவரத்து துறை அமைச்சர் வி கே சிங் திறந்து வைத்தார். அப்போது வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கமிட்டபடி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பழனிக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

பதஞ்சலி கொரோனா மருந்து..! ”அப்பட்டமான பொய்” நீதிபதிகள் காட்டம் …!!

சாமியார் பாபா ராம்தேவின் கோரோனில் ( coronil) மருந்தை மக்களுக்கு செலுத்த அனுமதி கொடுத்தது யார் ? என்று இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா பரவல்  உச்சத்தில் இருந்தபோது சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கோரோனில் என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. எதிர்ப்புகள் வலுத்ததையடுத்து ஆயுஸ் அமைச்சகம் சாமியார் ராம்தேவ்வின் கோரோனில் மருந்திற்கு ஒப்புதல் கொடுப்பதை நிறுத்தியது. இந்த நிலையில் சாமியார் ராம்தேவ் மீண்டும் கொரோனாவை 100% குணப்படுத்தும் என கூறி கோரோனில் மருந்தை அறிமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

பொய் பிரசாரம் செய்து அரசியல்… இதுதான் நாட்டின் நிலைமை… மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு…!!!

பொய் பிரசாரம் செய்து அரசியல் செய்யும் சூழல் நாட்டில் உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பல கருத்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஏழைகள், விவசாயிகளுக்கு பணம் வழங்க இயலாது… மத்திய அமைச்சர்… அதிர்ச்சி…!!!

இந்தியாவின் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பணம் வழங்க இயலாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அதில் நிர்மலா சீதாராமன் பல்வேறு பட்ஜெட் கணக்குகளை தாக்கல் செய்தார். அது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தன. சில திட்டங்கள் மக்களை வறுமை நிலைக்குத் தள்ளும் வகையில் இருந்தன. இந்நிலையில் வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்கள் நிதி வழங்காத வரை, ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பணம் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு விவசாயிக்கும் வங்கி கணக்கில் ரூ.18,000 வரவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 18 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தைப் போலவே மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, “மேற்கு வங்காள மாநிலத்தில் பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலமாக விவசாயிகள் அனைவரும் பயன் பெறுவதை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடுத்துவிட்டார். அதே விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 2-ல் 10,12-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு… மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும் ஜனவரி 17 முதல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு கடும் எச்சரிக்கை… மக்களுக்கு அதிர்ச்சி செய்தி… உஷார்…!!!

பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கும் பரவலாம் என்று மத்திய அமைச்சர் சஞ்சீவ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு… செம…!!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஒரு நற்செய்தி “ஃபாஸ்ட்டேக் காலக்கெடு நீட்டிப்பு”… மத்திய அரசு அறிவிப்பு..!!

எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]

Categories
தேசிய செய்திகள்

அப்போ “GO கொரோனா”… இப்போ “NO கொரோனா”… வைரலாகும் கொரோனா கோஷம்…!!!

நாட்டு மக்கள் அனைவரும் நோ கொரோனா என்று கோஷமிடுங்கள் கொரோனா ஓடிவிடும் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ஆசிரியர்களுடன் இன்று ஆலோசனை… மத்திய அமைச்சர் அதிரடி…!!!

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பொதுத் தேர்வு பற்றி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் உள்ளே வரக்கூடாது… இன்னும் நீக்கப்படாத கட்டுப்பாடு… மத்திய அமைச்சர்…!!!

வளைகுடா பிராந்தியத்தில் இருக்கின்ற சில நாடுகள் இந்திய நாட்டினர் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை தற்போது வரை நீக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் எவரும் நுழைவதற்கான கட்டுப்பாடு மேலும் நீட்டிக்கப் படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை கடந்த மே மாதம் ஆறாம் தேதி முதல் இயக்கி […]

Categories
தேசிய செய்திகள்

25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் இந்தியா வரும்…!!

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்கு முன்பு இந்தியா வந்து சேரும் என்று மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இறக்குமதிக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். எகிப்து, ஆப்கானிஸ்தான், […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று…!!

மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேலையில் தொற்று  பாதிப்பிலிருந்து குணம் அடைபவர்களின்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும்  கொரோனா தொற்று காரணமாக அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுப் பணிகளில் இருப்பவர்கள் பலரும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் விவகாரத்துறை  அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

6 மாசத்துல… பெண்களுக்கு எதிரா இவ்ளோ குற்றமா..?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக பெண்கள் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக பதில் கொடுத்துள்ளார். அதில், சென்ற மார்ச் 1 ஆம் தேதி முதல் செப் 18 ஆம் தேதி வரை மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த 13,410 புகார்கள் தேசிய பெண்கள் ஆணையத்தில் கொடுக்கப்பட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்… “நாடகமாடும் நாடு”.. மத்திய அமைச்சர் விமர்சனம்…!!

தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தீவிர வாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் – சீனா ஆப்கானிஸ்தான் – தலிபான் போன்ற நாடுகளுக்கு இடையே தீவிரவாத தாக்குதல் வலுப்பெற்றிருக்கிறது. இந்நிலையில் தாக்குதல் நடைபெற்றாலும் அதற்கு பொறுப்பேற்க எந்த ஒரு தீவிரவாத அமைப்பு முன்வரும் நிலையில் இல்லை. இதில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடுகளும் இருக்கின்றன. இதுகுறித்து மத்திய அமைச்சர், தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவர்களின் எதிர்காலம் முக்கியம்”….இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயம்… மத்திய அமைச்சர் உத்தரவு…!!

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக நடத்த முடியாமல் இருக்கும் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு சம்பந்தமாக பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இதனை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், மத்திய கல்வித்துறை மந்திரி ரமே‌‌ஷ் பொக்ரியால் நேற்று பல்வேறு […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

“எந்த நாட்டில் தயார் செய்தது” பதிக்க வேண்டியது – மத்திய அமைச்சர் அதிரடி..!!

வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் முத்திரையை பொருட்களில் பதிக்க வேண்டும் மத்திய அமைச்சர் உத்தரவு.  தாங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் தெரியப்படுத்த வேண்டும். என்று மத்திய அமைச்சரான  ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “அனைத்து தயாரிப்பு நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அவர்கள் தயாரித்து விற்பனை செய்யும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது… மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது என்றும் இது மிகவும் குறைவுதான் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இன்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனின் தலைமையில் அமைச்சர்கள் குழு (GoM) கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

சுமார் 15,000 தேர்வு மையங்களில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும்… மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால்!!

இந்த முறை நாடு முழுவதும் சுமார் 15,000 மையங்களில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் 15,000 மையங்களில் நடைபெறவுள்ளது. முன்னதாக 3,000 மையங்களில் தேர்வுகள் நடத்த தோட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் […]

Categories
தேசிய செய்திகள்

மே 25 முதல் தொடங்கவுள்ள உள்நாட்டு விமான போக்குவரத்திற்கான புதிய நெறிமுறைகள் வெளியீடு!

நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் உள்ளூர் விமானப் பயணத்திற்கு புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளார். அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி கிடையாது. இருமல், காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள் அமர விமானத்தில் தனி இடத்தில் இருக்கும். பயணிகள் அனைவரும் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வந்து விட […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறக்க உத்தரவு: மத்திய அரசு

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் உத்தரவிட்டுள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 7 நாட்களாக, 80 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்..!

கடந்த 7 நாட்களாக சுமார் 80 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இன்று பயோடெக்னாலஜி துறையின் தன்னாட்சி நிறுவனத்துடன் காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் உரையாடல் நடத்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” கடந்த 14 நாட்களில், நாட்டில் கொரோனா பாதிப்பின் இரட்டிப்பு விகிதம் 8.7 ஆகவும், கடந்த 7 நாட்களுக்கு இது 10.2 நாட்களாகவும் உள்ளது. கடந்த 3 நாட்களில், இது […]

Categories
தேசிய செய்திகள்

மே 3-ந் தேதிக்கு பிறகும் இயங்காது ? அமைச்சர் கொடுத்த ஷாக் …!!

மே 3ஆம் தேதிக்கு பின்னர் விமான ரயில்  போக்குவரத்துக்கு சேவை தொடங்குவது குறித்து முடிவெடுக்கவில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.  மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு என கூறப்பட்ட காரணத்தினால் அதற்குப்பிறகு பயணம் செய்வதற்கான முன்பதிவு ரயில்வே நிறுவனம் அனுமதிக்கவில்லை. ஆனால் ஏர் இந்தியா போன்ற சில விமான நிறுவனங்கள் மே 4ஆம் தேதி முதல் உள்நாட்டு வழித்தடங்கள் பயணம் செய்ய முன்பதிவு அனுமதித்துள்ளனர் இதனால் மக்களிடையே ரயில் விமான சேவைகள் தொடங்குவது குறித்து குழப்பம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சுமார் 400 மாவட்டங்களை கொரோனா தாக்கவில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

இந்தியாவின் சுமார் 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். மேலும், கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டள்ளது என அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” ஜனவரி 7ம் தேதி சீனாவில் முதல் […]

Categories

Tech |