வரும் காலங்களில் பயணிகளுக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும், ரயில் நிலையங்களில் பார்சல் முறையில் கடைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கோயல் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி குளிர்சாதனம் அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே […]
