மக்களை நேரில் சந்தித்து உங்கள் பகுதி குறைகளை கேட்டறியும் படி மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இதில், நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இந்த ஏழு மாநில சட்டசபை தேர்தலில் குறைந்தது, ஐந்து மாநிலங்களிலாவது வெற்றி பெறாவிட்டால், 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலு பெற்று […]
