டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரைகள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. இதையடுத்து […]
