Categories
உலக செய்திகள்

மத்திய அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு…. மகிழ்ச்சியில் குழந்தைகள்…!!

மத்திய அமெரிக்காவில்  பனிப்பொழிவு  காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர். மத்திய அமெரிக்கப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக பனிச்சறுக்கில்  ஈடுபட்டு தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர். மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளில் மணிக்கு 64 கிலோ மீட்டர் வேகத்தில் பனிக்காற்று வீசுகிறது. இதனால்  பல பகுதிகளில் 30 சென்டிமீட்டர் அளவுக்கு பனி  படர்ந்துள்ளது.  இப்பனிக்காற்றால்  2400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

45 விஷ பாம்புகள்… 6 உடும்புகளை பாசத்தோடு வளர்க்கும் இளைஞர்… அவரின் ஆசை என்ன தெரியுமா?

கொடிய விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் ஊர்வன இனங்களை இளைஞர் ஒருவர்  வீட்டில் வளர்த்து வந்த இளைஞர். மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நிகரகுவா  என்னும் நாட்டில் jose alberto deladillo (வயது 27) இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். பாம்புகள் , உடும்புகள் , மற்றும்  ஊர்வன, போன்றவை மீது அதிக பாசம் கொண்ட இவர் தனது வீட்டில் கொடிய விஷம் கொண்ட 45 பாம்புகள், 12 ஆமைகள் மற்றும் ஆறு உடும்புகள் போன்றவற்றை   வளர்த்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை தடுக்க… எல் சல்வடோர் நாட்டில் 30 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு!

மத்திய எல் சல்வடோர் நாட்டின் (El Salvador) கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 30 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்கம் சீனப் பெருஞ்சுவரையும் தாண்டி ஐரோப்பா, மத்திய கிழக்கு, அமெரிக்காவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வேடாரின் பிரதமர் நயீப் புக்கேலே (Nayib Bukele) நேற்று (சனிக்கிழமை) கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 30 […]

Categories

Tech |