போலீஸ் ஏட்டுவை வெட்டிய வியாபாரியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு மது வாங்க சென்ற ஒருவர் ஊழியரிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு ராஜு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது தகராறில் ஈடுபட்ட நபரை வெளியில் போகும்படி ஏட்டு ராஜு அறிவுறுத்தினார். ஆனால் அந்த நபர் தொடர்ந்து தகராறு […]
