அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்து கொண்டிருந்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் தடை உத்தரவை மீறி மது விற்பனை செய்கிறார்கள் என்று காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அதே பகுதியில் வசிக்கும் அப்பாஸ் என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரை கையும், களவுமாக பிடித்து […]
