சின்னமனூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூரில் உள்ள புலிக்குத்தி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். 27 வயதான இவர், 27.3.2016 அன்று பல்லவராயன் பட்டியில் குடி போதையில் நின்று கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் சின்னமனூர் வழியாக போடி நோக்கி சென்ற அரசு பேருந்தை செல்வராஜ் வழிமறித்து, பஸ்சை எடுக்கவிடாமல் தகராறு செய்தார். மேலும் பஸ் மீது […]
