டெல்லியில் புது மதுக்கொள்கை சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் சில்லறைமதுபானக் கடைகளை இனிமேல் அரசு நடத்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டு அதை விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது. இக்கொள்கையின் கீழ் 850 மதுபான கடைகளை திறக்க தனியாருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அந்த மதுக்கொள்கை இந்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சூழ்நிலையில் 2 முறை மதுகொள்கை நீட்டிக்கப்பட்டது. இப்போது நடைமுறையிலுள்ள புது மதுக்கொள்கை நாளையுடன் நிறைவடைகிறது. இதனிடையில் புது மதுபான கொள்கையில் விதிமுறை மீறல் நடந்தது […]
