காரில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்து 428 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி தீபக் சிவாஜ் தலைமையில், தனிப்பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் எம்.ஆர்.டி நகர் அருகே உள்ள தனுஷ்கோடி செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் மதுபாட்டில்கள் கடத்தி […]
