மது அருந்தக்கூடாது என தந்தை கண்டித்தததல் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்துள்ள அவினாசிபட்டியில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சதீஷ்குமார் எலச்சிபாளையம் ஹாலோ பிரிக்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து தினமும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரங்கசாமி மகனை கண்டித்துள்ளார். இதனைதொடர்ந்து நேற்று […]
