விருதுநகர் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த 2 இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள முகவூரில் அறிவுராஜ்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற அறிவுராஜ் அவரது உறவினர் தவமணி(18) என்பவருடன் தளவாய்புரத்தில் உள்ள ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் கிணறு அருகில் வைத்து மது அருந்திவிட்டு குளித்துள்ளனர். அப்போது […]
