ராமநாதபுரத்தில் மது அருந்திவிட்டு ஒருவரை அரிவாளால் வெட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள குடியூர் கிராமத்தில் வெங்கடேஸ்வரன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள மது கடைக்கு இருசக்கர வாகனத்தில் செய்துள்ளார். இதனையடுத்து மது பாட்டிலை வாங்கிய வெங்கடேஸ்வரன் மதுக்கடைக்கு அருகே வைத்து குடித்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த கற்பூர பாண்டியன்(35) என்பவர் இங்கு மது அருந்தக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் […]
