வட மாநிலத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் மதுபானம் வினியோகிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்களுக்கு மதுபான விருந்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ், அனைவருக்குமான வளர்ச்சி என்ற பிரதமர் மோடியின் வாக்கியத்தை அதில் குறிப்பிட்டு மதுபானத்துடன் அனைவருக்குமான வளர்ச்சி என்று விமர்சனம் செய்து வருகின்றார்.
