வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள டி.ஆர்.ஓ காலனியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முகமது என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முகமது கட்டிடத்தின் 2-வது மாடியில் இருக்கும் சமையல் […]
