சாத்தான்குளம் வழக்கில் சிறையிலிருக்கும் 5 காவல்துறையினரை நாளை நேரில் ஆஜர்படுத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது சிபிஐ வழக்கை விசாரணைக்கு ஏற்று நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிபிசிஐடி முதலில் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி […]
