Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர்

பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. த. அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மையங்களில் ஆய்வு மேற்கொண்டவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோபத்தை தணிக்க பக்கத்து வீட்டுக்காரனை வெட்டிய நபர் …!!

மதுரை அருகே வீட்டின் முன்பாக கழிவுநீர் சாக்கடை வழிந்தோடியதால் ஆத்திரமடைந்த அந்த வீட்டுக்காரர் எதிர் வீட்டுக்காரரிடம் அரிவாளால் வெட்டித் தன் கோபத்தை தணித்து கொண்ட சம்பவம் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்கள் முன்கோபத்தால் வெட்டுக்குத்து நிலைக்கு ஆளான பரிதாப சம்பவம்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏழை மாணவர்களுக்‍கு இலவச பயிற்சியளிக்‍கும் இளைஞர்கள் ….!!

மதுரை அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் ஏழை மாணவ மாணவிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் விளையாட்டு மற்றும் அரசு பணிக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இது மட்டுமின்றி பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு காலணிகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் பால், சுண்டல் போன்ற உணவுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் …!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் வழக்கு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். வாடிப்பட்டி அருகே கட்சிகட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவர் செம்ளிப்பட்டி பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்றார். பின்னர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பல்வேறு பகுதிகளுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் ஏழு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வட மாநில கொள்ளையர்கள் நடமாட்டம் – போலீசார் விசாரணை

மதுரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் அமைந்துள்ள குடியிருப்பில் மர்ம குறியீடுகள் காணப்படுவதால் வடமாநில கொள்ளையர்கள் நடமாட்டம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ள DRO காலனி மதுரை மாநகரில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சில வீடுகளின் கதவுகள் அருகே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையிலிருந்து மூட்டை மூட்டையாக அரிசி கடத்தல் …!!

மதுரையில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக அரிசி கடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே நியாய விலை கடை அமைந்துள்ளது. இங்கு அரிசி மூட்டை மூட்டையாக பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மூன்று இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்களின் வாகனத்தில் நியாய விலை கடை ஊழியரே அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்று மற்றொரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 5 பெண்கள் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் செங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உடல் கருகி பலியாகினர். 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே மதுரை மாவட்ட எல்லையான பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் சரவெடிகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவை காரணம் காட்டி – கணவருக்கு வேறு திருமணம் செய்ய திட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கொரோனாவை காரணம் காட்டி கணவரை அவரது பெற்றோர் அடைத்து வைத்து இருப்பதாகவும் அவர்களிடம் இருந்து காதல் கணவரை மீட்டுத்தரக் கோரியும் பச்சிளம் குழந்தையுடன் மகாலக்ஷ்மி என்ற பட்டதாரி பெண் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதிக வரதச்சனை தரும் வேறொரு பெண்ணுடன் கணவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளதால் உடனடியாக கணவரை மீட்டுத்தர வேண்டும் என மகாலட்சுமி கூறியுள்ளார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தலில் திடீர் திருப்பம் …!!

மதுரையில் அதிமுக நிர்வாகி மிரட்டியதன் காரணமாக பாதுகாப்பான இடத்தில் இருந்ததாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை உசிலம்பட்டி அருகே நாட்டார்மங்கலம் கிராம ஊராட்சித் தலைவராக இருப்பவர் திரு. கணேசன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் கடத்தபட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து கிராம கமிட்டி சார்பில் அதிமுக பிரமுகர் திரு. சிவப்பிரகாஷ் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தரர். இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஊராட்சித் தலைவர் திரு. கணேசன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுப்பு …!!

மதுரை நகரில் போர் வீரரின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . நாட்டிற்காக போரிட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகல் அமைக்கும் வழக்கம் பண்டைய காலங்களில் இருந்துள்ளது. இந்த நடுகல்லில்  இருக்கும் குறிப்புகள் மூலம் தொல்பொருள் ஆய்வாளர்கள் பழங்கால நடைமுறைகளை அறிந்து கொள்ள முடிகிறது. தற்போது மதுரை முனி சாலை பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் கால நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. போரில் உயிர்நீத்த வீரனுடன் அவனது மனைவி உடன்கட்டை ஏறி உயிரிழந்ததன் நினைவாக இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா – நீதிபதி கேள்வி

10-ம் வகுப்பு படித்து விட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை மாவட்டம் துவரிமான்னை சேர்ந்த மதுரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

90 பதக்கங்களை பெற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரை அலுவலக உதவியாளராக ஏற்றுக்கொள்ள முடியாது ….!!

பத்தாம் வகுப்பு படித்து விட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பார்களா என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை மாவட்டம் துவரிமான்னை சேர்ந்த மதுரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் செயலாளர் வீட்டிற்க்கு தீ வைப்பு …!!

மதுரையில் ஊராட்சிமன்ற தலைவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் வீட்டை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் குன்னத்தூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணன் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டனர். இருவரின் உடல்களும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான குன்னத்தூரில் அடக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் குன்னத்தூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பணியாற்றி வரும் செயலாளர் வீரனன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரை உடனடியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு பிம்ஸ் நோயா – சுகாதாரத்துறை மறுப்பு

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பீம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத் துறையின் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விஷவாயு தாக்‍கி துப்புரவுப் பணியாளர் பலி – அரசு சார்பில் எந்தவித உதவியும் கிடைக்‍கவில்லை

மதுரை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்த சோலை நாதன் என்பவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு சார்பில் எந்தவித உதவியும் வழங்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் சோலை நாதனின் மனைவி முத்துலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிசான் நிதி முறைகேடு – பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் குடும்ப அட்டை ரத்து

கிசான் நிதி முறைகேடு பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் குடும்ப அட்டை முதியோர் உதவி தொகை ரத்து செய்யப்பட்ட கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தண்டோரா மூலம் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பேரையூர் உள்ளிட்ட தாலுகாக்களில் போலி கணினி மையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஒரே வீடுகளில் 2 முதல் 3 பேர் வரை கடன் வாங்கியிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம் …!!

மதுரை அருகே கள்ளந்திரி பாசன வாய்க்காலில் திடீரென ஒரு ஆண் சடலம் மிதந்தபடி வந்ததால் அங்கு குளித்துக் கொண்டிருந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். மதுரை மாவட்டத்தில் ஒரு போக விவசாய பாசனத்திற்காக பெரியார் கால்வாய் மற்றும் பிரதான கால்வாயில் இருந்து கடந்த 27-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கால்வாயில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று இது போல் பலரும் அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜனநாயக இயக்கத்தில் கோஷ்டிப் பூசல் இருக்கும் ….!!

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் ஜனநாயக இயக்கம் என்றால் கோஷ்டி பூசல் வரத்தான் செய்யும் என தெரிவித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் துரோகம் இருந்ததாக குறிப்பிட்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பதவி வாங்கி உயர்ந்தவர்கள் துரோகம் செய்து விட்டு ஓடிய போதும் கட்சி தொண்டர்கள் தான் காத்தனர் என சுட்டிக்காட்டினார். திமுக என்ற […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிஞ்சு குழந்தைகளை தீ வைத்து கொன்ற தாய் …!!

மதுரையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் இரண்டு பிஞ்சு குழந்தைகளுக்கு தீ வைத்துவிட்டு தாயும் தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி, அவருக்கும் மனைவி தமிழ்ச்செல்விக்கும் அவ்வப்போது குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தமிழ்ச்செல்வி தனது இரண்டு குழந்தைகளான வர்ஷா ஸ்ரீ, வர்ணிகா ஸ்ரீ, ஆகிய குழந்தைகள் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த கொடூர […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூக்கள் விலை கடும் வீழ்ச்சி – குப்பையில் கொட்டும் விவசாயிகள்

மதுரையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் பூக்களை குப்பையில் கொட்டி தங்கள் வேதனையை விவசாயிகள் வெளிப்படுத்தினர். மதுரை திருமங்கலம் அருகே அரசபட்டி, வலியகுலம், தும்பங்குலம், கப்பலூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை, பிச்சி, முல்லைப் பூக்களை பயிரிட்டு உள்ளனர். சுபநிகழ்ச்சிகள் கோயில் விழாக்கள் நடைபெறாமல் இருப்பதால் ஏற்கனவே பூக்கள் விற்பனையாகாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிலோ 40 ரூபாய்க்கும் குறைவாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி – உறவினர்கள் சாலை மறியல் ….!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவத்தில் அலட்சியமாக இருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்த விவசாயி அக்னி வீரன் என்பவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயல் வெளியை சுத்தம் செய்தார். அப்போது கீழே கிடந்த இரும்பு குழாய் ஒன்றை ஊன்றி நிறுத்தினார். அப்போது அந்த குழாயின் மீது தாழ்வாக இருந்த மின் கம்மி உராய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்குவதில் காலதாமதம் ….!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து நிதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக அமைச்சர் RV. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அமைக்கப்படயுள்ளது என்றார். கொரோனா காலகட்டத்தால் ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து வரவேண்டிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது என்றார் அவர். உலக வங்கின் நிபந்தனைகள் நிறைவேற்றிய பிறகு எய்ம்ஸ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்றவருக்கு அரிவாள் வெட்டு சம்பவத்தால் பதற்றம் …!!

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்றுவரை அரிவாளால் வெட்டிவிட்டு இளைஞர்கள் வழிப்பறி செய்யும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 10-ம் தேதி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா என்பவரை இரண்டு இளைஞர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது மற்றொரு பைக்கில் வந்த நபர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். ஆனால் இருவரையும் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த பகுதியில் உள்ள […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தர்மம் தலை காக்கும்” கொரோனா நிதிக்காக ரூ1,10,000 வழங்கிய….. மதுரை பிச்சைக்காரர்….!!

தர்மம் தலைகாக்கும் என்ற கூற்றின் படி 1,10,000 ரூபாய் கொரோனா நிதி உதவியாக பிச்சை எடுத்து ஒரு முதியவர் கொடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த 70 வயதான பூல்பாண்டியனுக்கு மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். வயோதிக காலத்தில் பிச்சை எடுத்துதான் சாப்பிடக்கூடிய நிலை இருந்தாலும் தனக்குப் போக தான் தானமும் தர்மமும் என்ற கருத்திற்கு விதிவிலக்காக இவர் அமைந்துள்ளார். ஏனென்றால் இவர் தனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து அவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி – அனுமதி கோரி வழக்கு

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்து தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆணையை ரத்து செய்யக்கோரி பாஜகாவை சேர்ந்த வழக்கறிஞர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காமராஜர் பல்கலை …. தொலைதூர கல்வி தேர்வில் முறைகேடு …..!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பான முழு விசாரணை அறிக்கை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கம் கடந்த நவம்பர் மாதம் நடத்திய பருவத் தேர்வில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். அந்த விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கள் விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரள மாநில தேர்வு மையங்களில் இருந்து வந்த விடைத்தாள்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாய், மகன் மீது கொடூரத் தாக்குதல்-பதைபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

மதுரையில் முன்விரோதம் காரணமாக தாய்-மகன் ஆகிய இருவரும் ஆயுதங்களால் தாக்கப்பட்ட பதபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை பெத்தானியாபுரம் மாதா கோவில் பாஸ்கி நகர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா தனது கணவர் வெள்ளைச்சாமி மற்றும் மகன் முரளிதரனோடு வசித்து வரும் நிலையில் எதிர் வீட்டில் உள்ள லூர்துசாமி என்பவருடன் மாநகராட்சி இட ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற போவதாக லூர்துசாமிடம் எச்சரித்துள்ளனர். இதையடுத்து ரெஜினா குடும்பத்தினரிடம், லூர்துசாமி குடும்பத்தினர் தகராறில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெல் கொள்முதல் நிலையமின்றி வீணாகும் நெல் மூட்டைகள் ….!!

மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் நெல் மூட்டைகள் வீதியில் கிடந்த வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறட்டை பிரச்சனையை சரி செய்ய தனி சிகிச்சை பிரிவு தொடக்கம் ….!!

தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்ட நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை கண்டறியும் பரிசோதனை செய்து அதற்கான காரணங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் புதிய சிகிச்சை பிரிவை மருத்துவமனை முதல்வர் திரு. சங்குமணி தொடங்கி வைத்தார். […]

Categories
தேனி மதுரை மாவட்ட செய்திகள்

“பொதுநலன் கருதி டாஸ்மாக் திறக்கப்படவில்லை”- உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுக் கடைகள் திறக்கப்பட்டு இருப்பதில் எந்த ஒரு பொது நலனும் இல்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் அன்னை சத்யா நகரில் இருக்கும் மறுவாழ்வு மையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘டாஸ்மாக் கடைகளின் வருவாயில் நலத்திட்ட உதவிகள் செய்தாலும் மதுக்கடைகள் திறந்ததில் பொது நலன் ஏதுமில்லை. டாஸ்மாக் கடைகளில் கூட்டம், தனி மனித […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களை தகாத வார்த்தையில் திட்டியதால் மக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி குடும்ப அட்டைதாரர்கள் போராட்டம் நடத்தினர்.     மேலூர் அருகே கம்பர்  ஊராட்சிக்கு உட்பட்ட ஐயாவத்தான் பட்டியில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளராக  செல்வி என்பவர் உள்ளார் இந்த நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 1 கிலோவில் 200 முதல் 300 கிராம்வரை கொள்ளையடிப்பதாக  கூறப்படுகிறது. […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள்

இதுவும் பெண் குழந்தை….. 30 நாளில் சிசு கொலை…. எருக்கம்பால் கொடுத்த கொடூரம் …..!!

மதுரை அருகே பெண் குழந்தை என்பதால் எருக்கப்பால் கொடுத்து கொல்லபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செக்கானூரணி அடுத்துள்ள புள்ளநேரி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சௌமியா , வயிரமுருகன். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. லோடு மேனாக இருக்கும் இவரின் மனைவிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பெண் சிசு பிறந்து 30 நாட்கள் ஆன நிலையில் குழந்தை இல்லாததை கண்ட அண்டை வீட்டார்கள் குழந்தை எங்கே ? என்று […]

Categories

Tech |