மதுரையில் நடிகர் வையாபுரி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கியுள்ளார். தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக பல நடவடிக்கைகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதனிடையே பொதுமக்கள் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடிகரான வையாபுரி […]
