போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மனைவியின் உடலை எரித்த கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கட்டாரபட்டியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பம்மாள் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த முனியாண்டி தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அதே பகுதியில் வசிக்கும் சேர்ந்த சிலருடன் […]
