உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதியாக அழகர்கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். இவரைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அதன்பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிகொம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். […]
