கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளை வாக்குமூலம் அளித்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது வாக்குமூலம் அளித்து வருகிறார். சிசிடிவி காட்சிகளில் கோகுல்ராஜ் உடன் இருக்கும் பெண் யார் என்று நீதிபதிகள் கேட்டதற்கு யார் என்று தெரியவில்லை என சுவாதி பதிலளித்திருக்கிறார். உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்டபோது சுவாதி கண்கலங்கி இருக்கிறார்.
