மதுரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சைக்கிளில் கலெக்டர் அனிஷ் சேகர் வந்துள்ளார். மதுரையில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் விழிப்புணர்வாக அரசு அலுவலர்கள் அனைவருமே புதன்கிழமை தோறும் அலுவலகத்திற்கு சைக்கிளில், பொதுப் போக்குவரத்து மூலம் வரவேண்டுமென்று கடந்த சில நாட்களுக்கு முன் கலெக்டர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று ரிசர்வ்லைனில் உள்ள தனது வீட்டிலிருந்து பாரதி உலா ரோடு, ரேஸ்கோர்ஸ், உலகத் தமிழ்ச் சங்கம், காந்தி மியூசியம் பாதையாக கலெக்டர் அலுவலகத்திற்கு சைக்கிளில் […]
