மதுரையில் தனியார் அமைப்புகள் இணைந்து நடத்திய வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சியை மதுரை ஆதினம் தொடங்கி வைத்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, “பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவிடுவாங்க” என்று கூறிச் சென்றார். சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறையை பற்றி ஆதிதம் பேசியது தமிழக முழுவதும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு, “ஆதீனம் அரசியல்வாதியை போல செயல்படுகிறார். எங்களால் எகிறி அடிக்க முடியும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் மதுரை ஆதீனம் செய்தியாளர்களுக்கு பேட்டி தர […]
