மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். தலைநகர் புதுடெல்லியில் ராஜவீதி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைந்துள்ளது ஜனாதிபதி மாளிகை. இது ஜனாதிபதி இல்லமாகவும் மற்றும் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இத்தனை பாதுகாப்புகளையும் மீறி கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 மணி அளவில் ஜனாதிபதி மாளிகைக்குள் மது போதையுடன் ஒரு ஜோடி நுழைந்துள்ளது. இதனை கண்ட பாதுகாவலர்கள் அந்த ஜோடியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆண் […]
