சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரங்கா நகர் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக விஷநெடியுடன் கூடிய மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியில் வசிக்கும் முத்துராமலிங்கம், பாலாஜி மற்றும் வீரபாண்டியன் என்பது காவல்துறையினருக்கு […]
