பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மது பாட்டில்களை கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாம்பு கோவில் பகுதியில்அமைந்துள்ள டாஸ்மாக் கடையானது தற்போது முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் அந்த டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை கொள்ளையடிப்பதற்காக சுவரில் துளையிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் […]
