மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து கொளப்பள்ளி என்னும் ஊருக்கு சென்று கொண்டிருந்த காரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து அந்த காரில் சோதனை செய்ததில் மது பாட்டில்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொளப்பள்ளி பகுதியில் வசிக்கும் கார் டிரைவரான ஜான்பாஸ்கோ […]
