டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கூட்ரோடில் இருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் சிலர் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடையின் மேற்பார்வையாளர் அண்ணாமலை உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கலசபாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை […]
