மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை ஏன் மூட உத்தரவிடக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குன்னூர் வனப்பகுதியில் 100 மீட்டர் அளவிற்கு யானை வழித்தடம் அடைக்கப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் அங்கே சென்ற யானைகள் கீழே வழுக்கி விழுவது போன்ற காணொளி காட்சி வெளியாகியுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் போன்றோர் அடங்கிய அமர்வு முன்பு […]
