மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள ப.ஆயிபாளையம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். கோழிப்பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தங்கதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று தங்கதுரை மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றதால் அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியடைந்த தங்கதுரை வீட்டில் […]
