நாகை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் திருமேனிசெட்டித்தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதில் மதுபானம் வாங்குபவர்கள் சாலையில் நின்று மது அருந்துகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியோர்களிடம் தகராறு செய்து அவர்களுக்கு இடையூறாக இருக்கின்றனர். அதனால் பொதுமக்கள் […]
